30 ஆயிரம் கோடியை பத்தி நீங்க பேசுறீங்களா இல்லை நான் பேசவா? - முதல்வர் ஸ்டாலினுக்கு கெடு விதித்த அண்ணாமலை!
ஊழலில் தானே கொழிக்குது உங்கள் குடும்பம் என்ன முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த இடியை இறக்கி உள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கடந்த தமிழ் வருடப்பிறப்பு அன்று அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் விவகாரம் தமிழக அரசியலில் இன்று வரை மையப் புள்ளியாக சுழன்றுடித்து வருகிறது. அந்த பட்டியலில் ஒன்னரை லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை திமுக தலைவர்கள் சேர்த்து வைத்துள்ளனர் எனவும் அதற்க்கு ஆதாரங்கள் இருக்கின்றன எனவும் எண்ணமலை கூறினார் கூறியது மட்டுமில்லாமல் இதுவரையில் வெளியிட்ட சொத்து பட்டியல் விவகாரத்தை நான் சிபிஐ வசம் ஒப்படைக்க போகிறேன் எனக் கூறியது அறிவாலயத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திமுகவின் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் டி ஆர் பாலு போன்றோர் அண்ணாமலைக்கு எதிராக நான் வழக்கு தொடுக்கப்போகிறேன், நஷ்ட ஈடு கேட்கப் போகிறேன் என்றெல்லாம் கூறிவந்த நிலையில் நஷ்ட ஈடும் கிடையாது! மன்னிப்பும் கிடையாது என அண்ணாமலை ஒரே அடியாக அடித்து விட்டார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த இடியை இறக்கி உள்ளார் அண்ணாமலை, இன்று அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் திமுக ஊழல் ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையில் இதுவரை வெளிவந்த புகார்களுக்கும், சரி தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட 30,000 கோடி சர்ச்சைக்கும் சரி இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்காமல் முதல்வர் மௌனமாக இருப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, மேலும் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதல் என்பதை முதல் நாளிலிருந்து தமிழக பாஜக கூறிவந்ததை நேற்று மீண்டும் ஒருமுறை தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. இதை இன்றுவரை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என மக்களை ஏமாற்றி வருகிறது திமுகவின் ஆட்சி, திமுகவின் அதிகார போதையால் தினந்தோறும் மக்கள் அமைதிப்படுகின்றனர்.