30 ஆயிரத்தில் கொரோனா பாதிப்பு! பிப்ரவரியில் பள்ளி திறக்க முயற்சி - அமைச்சர் அன்பில் முடிவு!

Update: 2022-01-26 11:00 GMT

தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்று செல்லும் ஆபத்தான வேளையில் 10 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அவசரப்படுகிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழகத்தில் கொரோனா மூன்றாம்  அலை தீவிரமாகி வருகிறது. தினசரி புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தில் இருக்கின்றது. இன்னும் பரிசோதனை எண்ணிக்கைய அதிகப்படுத்தினால் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புகள் அதிகம். அப்படி இருக்கும் பட்சத்தில் கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு இணைய வழி கல்வி நடந்து வருகிறது. கொரோனா பரவல் மூன்றாம் அலை எப்போது முடியும் என தெரியாத இந்த சூழலில் பள்ளிகளை மீண்டும்  திறக்க அனுபமின்மை காரணமாக அவசரப்பட்டு வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

வரும் பிப்ரவரி மாதத்தில் 10, 11 மற்றும் 12'ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க முதல்வர் ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறையும் நிலை குறித்த அறிவிப்போ முன் ஏற்பாடுகளோ இல்லாத நிலையில் இன்னும் பத்து நாட்களே பிப்ரவரி மாதத்திற்கு இருக்கும் நிலையில், அமைச்சர் பள்ளிகளை திறக்க நடவடிக்கைகள் எடுப்பது அனுபவமின்மை காரணமா என தெரியவில்லை.


Source - maalai malar

Similar News