30 வருஷத்துக்கு முன் காஷ்மீரில் நின்று போட்ட சபதம்.... 370 விவகாரத்தின் பின் உள்ள மோடியின் சரித்திரம்.....
92 ஆம் ஆண்டு எடுத்த சபதம்...! 30 ஆண்டுகளில் கெத்தாக நிறைவேற்றி காட்டிய மோடி...!
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து கொண்டது. ஆனால் ஜம்மு காஷ்மீர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வராமல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 370 என்கிற சிறப்பு அந்தஸ்தில் வந்தது. அதற்கு பிறகு 1957ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது. இதனால் இந்த மாநிலத்திற்கு என்று பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றிற்கான சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது இருப்பினும் அம்மாநிலத்திற்கென தனி அரசியல் அமைப்பும் செயல்பட்டது.
மேலும் மத்திய அரசு, சட்டப்பிரிவு 370 இன் படி பாதுகாப்பு வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிர ஏதாவது விஷயங்களுக்காக ஜம்மு காஷ்மீரில் சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அம்மாநிலத்தின் அனுமதியைப் பெற்ற பிறகே இயற்ற முடியும்! இப்படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இருந்த காரணத்தினால் அம் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு இரட்டை குடியுரிமையும் இரண்டு தேசியக் கொடியும் ஏதேனும் அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்றாலும் அதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரமும் இல்லாமலும் இருந்தது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வசித்த மக்கள் ஜம்மு காஷ்மீருக்கு சென்று நிலங்களை வாங்கவோ அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களை வாங்கவோ முடியாத நிலையை இந்த சட்டப்பிரிவு 370 தாங்கிக் கொண்டிருந்தது. இப்படி இந்தியாவிற்குள் இருக்கும் ஒரு மாநிலம் இந்தியாவை விட்டு வெகு தூரத்தில் இருப்பது போன்ற சட்ட அமைப்புகளை பெற்றிருப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரும் சகஜ நிலையை அடைய வேண்டும் என்று கடந்த 1992 ஆண்டில் பிரதமர் மோடி லால் சவுக்கில் மூவர்ண கொடியை ஏற்றி சட்டப்பிரிவு 370 நீக்கியே தீருவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.