5 கி.மீ தூரத்தை கடக்க 45 நிமிடமா.. தி.மு.க MP-யிடம் கேள்வி கேட்ட பா.ஜ.க ஐ.டி.விங்க் மாநில செயலாளர் பிரதீப்..

Update: 2024-06-22 10:23 GMT

பள்ளிக்கரணை சாலையின் நிலை படுமோசமாக இருப்பது குறித்து பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப் அவர்கள் தென்சென்னை தொகுதி தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனிடம் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். இது குறித்து பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறும் போது, "பள்ளிக்கரணையில் உள்ள ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸிலிருந்து காமாட்சி மருத்துவமனைக்கு இடையிலான வெறும் 5 கிமீ தூரத்தை கடக்க 45 நிமிடம் ஆனது, இன்று காலை வாகனங்கள் அங்குலம் அங்குலமாக சென்றன. இது பற்றி யாருக்கும் கவலை இல்லை. நன்றி தி.மு.க" என்று பதிவிட்டிருந்தார்.


சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டுள்ள இந்த ஒரு கேள்விதான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. ஏனெனில் அந்த வழியாக சென்ற அனைவருமே, இத்தகைய துன்பத்தை கடந்த ஆண்டுகளில் அனுபவித்துதான் வந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் குறைந்தபட்சம் இந்த நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கரணையில் இருந்து 8.30 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்கு அசோக் பில்லர் சென்றடைய வேண்டியுள்ளது. பள்ளிக்கரணையில் இருந்து வேளச்சேரி வரை தேக்கநிலை ஏற்படுகிறது. இதற்கான திட்டம் என்ன? என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது முன்வைக்கப்பட்டு இருக்கிறது.


மேலும் "சென்னை வேளச்சேரியிலிருந்து பெரும்பாக்கம் வரை உள்ள பகுதிகள் முழுவதும் மோசமான சாலைகள், கடுமையான சாலை போக்குவரத்து நெரிசல், வாகனம் அங்குலம் அங்குலமாக நகரும் நிலை. பெரும்பாக்கம் மெயின் ரோடு, வெறும் 2-3 கி.மீ தூரம், நாளின் எந்த நேரத்தையும் கடக்க இவ்வளவு நேரம் ஆகும்? பரிதாபகரமான சாலைகள் மற்றும் யாரிடமிருந்தும் பதில் இல்லை. சென்னைக்கு சிறந்த நிர்வாகம் தேவை" என்று பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப் அவர்கள் பதிவிட்டுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News