5 மாநில வாக்கு எண்ணிக்கை: 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை!

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.

Update: 2022-03-10 05:33 GMT

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. 5 மாநிலங்களிலும் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உபியில் மீண்டும் பாஜகவே ஆட்சியை தக்க வைக்கிறது. அங்கு முதலமைச்சராக ஆதித்யநாத் உள்ளார்.

இன்று காலை 5 மாநிலங்களுக்கான முடிவுகள் வெளியாகி வருகிறது. ஆரம்ப முதலே உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் 230க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கின்றதை கூடுதலான தொகுதியை கைப்பற்றி வருகிறது. சமாஜ்வாதி 100 தொகுதிகளிலும், பகுஜன் 6, காங்கிரஸ் 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

அதே போன்று 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பாஜக 24 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 70 தொகுதிகளை வைத்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக 43 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் உள்ளது. தற்போது ஆட்சியை கைப்பற்றுவதற்கான கூடுதல் இடங்களை வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

சிறிய மாநிலமான கோவாவில் 40 தொகுதிகள் உள்ளது. அங்கு பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியை கைப்பற்றுவதில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகள் உள்ளது. அங்கு போட்டியிட்ட ஆம் ஆத்மி 88 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 15 இடங்களிலும், பாஜக கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றும் என சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News