57 பொதுச்செயலாளர்.. 32 துணைத்தலைவர்.. சோனியா அமைத்த குழு வேஷ்ட்.. கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி.!

57 பொதுச்செயலாளர்.. 32 துணைத்தலைவர்.. சோனியா அமைத்த குழு வேஷ்ட்.. கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி.!

Update: 2021-01-02 18:05 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்சிகள் நிர்வாகிகளை நியமிப்பது, தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்வது போன்ற பணிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க ஏதுவாக தனித்தனியாக கமிட்டிகளை அமைத்து கட்சியின் தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். 

இதில் பொதுச் செயலாளர்களாக 57 பேர், துணைத்தலைவர்கள் 32 பேர், செயலாளர்கள் 104 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, 34 பேர் கொண்ட தேர்தல் குழு, 19 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, 16 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்டவை குறித்து அக்கட்சியின் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது: இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை இதனால் எந்த அதிகாரமும் இருக்காது. அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு கட்சியின் தலைவர் அமைத்த குழுவே சரியில்லை என்று கூறிய கார்த்தி சிதம்பரத்திற்கு அக்கட்சியில் எதிர்ப்பு வலுத்துள்ளது.

Similar News