சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "பாரத் அன்னை வாழ்க... என் தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்'' என தமிழில் கூறி உரையை துவக்கினார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சேலம் பொதுக் கூட்டத்தில் மக்களுடைய ஆதரவு பெருமளவில் கிடைத்தது என்று கூறலாம். குறிப்பாக அவர் கோட்டை மாரியம்மன் வணங்கிய பிறகு சேலம் பொதுக்கூட்டத்தில் முதன் முதலாக உரையாற்றினார். மக்கள் திமுகவிற்கு எதிராக தங்களுடைய வெறுப்பை காட்ட வேண்டிய தருணமாக இதை பார்க்கிறார்கள். மக்களுக்காக பல்வேறு இடங்களில் நிற்க வேண்டிய திமுக அவர்களின் சார்பாக நிற்கவில்லை.
வரும் தேர்தலில் இதன் பிரதிபலிப்பு இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு கூறியிருந்தார் அது மட்டும் கிடையாது திமுகவிற்கு எதிரான நேரடி காரசார பிரச்சாரங்களையும் அவர் எடுத்துரைத்தார். திமுகவினர் ஐந்தாவது தலைமுறையாக 5 அதிகாரத்தை பெற வேண்டும் என்று தீவிரமாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவற்றை தமிழக மக்கள் விடுவதற்கு வாய்ப்பு கிடையாது. பல்வேறு மக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதால் திமுகவினர் தங்களுடைய தூக்கத்தை தொலைத்து இருப்பதாகவும் பிரதமர் என்று கூறியவர்கள் குறிப்பிட்டு கூறியிருந்தார்.
நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் வேகமாக துவங்கிவிட்டது. துவக்கத்திலேயே இண்டியா கூட்டணியின் நோக்கம் தெளிவாக தெரிந்து விட்டது. இந்து மதத்தின் சக்தியை அழிப்பதே அவர்களின் நோக்கம். நாம், சக்தியை எப்படி வழிபடுகிறோம்? என்பதை சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவற்றை தடுக்கும் விதமாக அவர் கொண்டு நடவடிக்கை அமைந்து இருக்கிறது. எனவே தேர்தல் நேரம் அவர்களுக்கு நாம் தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News