6 மாதங்களுக்கு பருத்தி மீதான சுங்க வரிகள் நீக்கம் - மோடி அரசின் அதிரடி அறிவிப்பால் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

Update: 2022-04-15 12:00 GMT

பருத்தி இறக்குமதி மீதான அனைத்து சுங்க வரிகளையும் செப்டம்பர் 30 வரை மத்திய அரசு அதிரடியாக விலக்கு அளித்து அறிவித்துள்ளது

பருத்தியின் விலையை குறைக்கும் வகையில் பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலக்கு ஜவுளி தயாரிப்பாளர்கள், துணி, ஆடைகள் மற்றும் அதன் சார்ந்த தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் என மற்றும் ஜவுளித் தொழில் மற்றும் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் என்று ஜவுளி அமைச்சகம் வியாழக்கிழமை நேற்று (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, கச்சா பருத்தியின் மீது 5 சதவீத அடிப்படை சுங்க வரி (பி.சி.டி) மற்றும் 5 சதவீத விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (ஏ.ஐ.டி.சி) நீக்கப்பட வேண்டும் என்று தொழில்துறையினர் கோரி வருகின்றனர். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) பருத்தி இறக்குமதிக்கு சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

இந்த அறிவிப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 14) முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் 30 செப்டம்பர் 2022 வரை அமலில் இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. கச்சா பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்குவது இந்தியாவில் பருத்தி விலையில் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று அமைச்சகம் மேலும் கூறியது.


Source - Swrajya


Tags:    

Similar News