60'களில் தி.மு.க'விற்கு உதவிய இளைஞர் படை, இன்று அண்ணாமலை பின்னால் திரள்கிறது - துல்லியமாக கணித்த SG.சூர்யா
தமிழக பா.ஜ.க. தலைவராக கே.அண்ணாமலை பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டாகிறது. அவர் ஒரு ஆண்டில் என்ன செய்துவிட்டார் என்பவர்களுக்கு, மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை வித்திட்டுள்ளார் என்று தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு வருடத்தில் திரு.அண்ணாமலை என்ன செய்து விட்டார்?
மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார்.
எப்படி?
1950, 1960-களில் தமிழகத்தில் தி.மு.க எப்படி இளைஞர் படையை கட்சியில் இணைத்து ஆட்சியைப் பிடித்ததோ, 2014, 2015-களில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் எப்படி இளைஞர்களை கட்சியில் இணைத்து ஆட்சியை பிடித்தததோ அதற்கு நிகரானதொரு அரசியல் மாற்றம் தமிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. அதை கூர்ந்து, சார்பின்றி தமிழக அரசியல் களத்தை பார்ப்பவர்கள் மட்டும் தான் உணர முடியும்.
சாரை சாரையாக இளைஞர்கள் அரசியலை நோக்கி, பா.ஜ.க பேரியயக்கத்தை நோக்கி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தயாராக வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்படியொரு இளைஞர் எழுச்சி நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் கடந்த 5 தசாப்தங்களாக நடந்ததாக என்னால் நினைக்க முடியவில்லை.
அண்ணாமலை எனும் தலைவர் தமிழகத்தில் நிச்சயம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதில் ஏதொரு மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. கடந்த ஒரு வருடமாக திரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் தமிழ்நாடு பா.ஜ.க மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தில், பெருமைமிகு தருணத்தில் அண்ணாமலை அவர்களின் அணியில் தமிழக பா.ஜ.க மாநில செயலாளராக பொறுப்பு வகித்து செயல்படுவதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். வெற்றிகரமான ஒராண்டு சேவைக்கு வாழ்த்துக்கள் பேரன்புக்கும், பெருமதிப்பிற்கும் உரிய அண்ணா, நாளை நமதே! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Facebook