72 மணி நேர கெடு முடிகிறது: கோட்டையை முற்றுகையிட தயாராகும் பா.ஜ.க.!

Update: 2022-05-25 05:05 GMT

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு 72 மணி நேரத்துக்குள் குறைக்க வேண்டும். அப்படி இல்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி அண்ணாமலை விதித்த 72 மணி நேர கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு மத்தியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (மே 24) போராட்டம் குறித்த ஆலோசனையும் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் அளித்த பேட்டியில், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், பெட்ரோல் விலை பெயரளவில் 3 ரூபாயை குறைத்துவிட்டு சும்மா பீற்றிக் கொண்டுள்ளனர். டீசல் விலையில் ஒரு பைசா கூட குறைக்காமல் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

மேலும், மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை காட்டிலும் மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி அதிகம். இதில் மாநில அரசு வரியை குறைக்காமல் இருக்குமாம். மத்திய அரசு பகிரும் கலால் வரியில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. ஆனால் இதனை மறைத்துவிட்டு தாங்கள் ஒரு உத்தமர்களை போன்று தி.மு.க. போலீயான வேஷம் போட்டுள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள். இதற்கு மத்தியில் பா.ஜ.க. அறிவித்ததை போன்று கெடு முடிந்த பின்னர் தி.மு.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத பட்சத்தில் கோட்டையை முற்றுகையிட பேரணி நடைபெறும். அதற்கான அனைத்து ஏற்பாடுகம் தயாராகி வருகிறது என்றார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News