75 நாட்களில், 200 பிரச்சாரங்கள் மற்றும் 80 பேட்டிகள் என மாரத்தான் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர்!!

Update: 2024-06-01 07:37 GMT

நாட்டின் மிக முக்கிய மற்றும் பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுகள் நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த மே 30ஆம் தேதி இறுதி கட்ட பிரச்சாரங்கள் முடிந்ததை அடுத்து பிரதம நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியான பிறகு மார்ச் 19ஆம் தேதி தமிழகத்தில் நடந்த முதல் கட்ட தேர்தலை ஒட்டி மார்ச் 16ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து தனது பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி முதலில் தொடங்கினார். 

அதற்குப் பிறகு தொடர்ச்சியாக 75 நாட்கள் பல மாநிலங்களுக்கு சென்று பல பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு ஒரு மாரத்தான் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதாவது கடந்த 75 நாட்களில் தேர்தல் நடந்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 200 பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலை பேரணிகளிலும் பங்கேற்று, நாட்டில் முதன்மையான நாளிதழ்கள், டிவி சேனல்கள், வாரம் மற்றும் மாத இதழ்கள் என எண்பதிற்கும் மேற்பட்ட பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார். 

அதே சமயத்தில், கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டங்களில் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வருவார்கள் என்று தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். அதற்கு பல விமர்சனங்களையும் பிரதமர் பெற்றார். இருப்பினும், காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இப்படி ஒரு கருத்து இருப்பதை ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்தார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்திகள் ராமர் கோவில் திறப்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கியது என பாஜகவின் சாதனைகளையும் பிரச்சாரத்தில் பிரதமர் முன்வைத்து பேசியுள்ளார். 

இதனை அடுத்து, ஒவ்வொரு லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த பிறகு பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பிரதமர். அதன்படி 2014 இல் மகாராஷ்டிராவின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பிரதாப்காட் மலைக்கோட்டைக்கு சென்று சில தினங்கள் தங்கியிருந்தார். மேலும் 2019ல் உத்தரகண்டில் கேதர்நாத்திற்கு சென்று குகையில் தியானம் மேற்கொண்டு இருந்தார். இதன் படியே, இந்த முறையும் தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்துள்ள பிரதமர், கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது தியானம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. 

Source : Dinamalar 

Tags:    

Similar News