மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் - அண்ணாமலை!

மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் - அண்ணாமலை!

Update: 2020-10-26 11:01 GMT

மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு ஏற்படுத்தும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. நீட் முடிவுகள் தற்போது வெளி வந்து, மருத்துவ படிப்பு சேர்க்கை கவுன்சிலிங் துவங்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.

இந்நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு மசோதா ஆளுநரால் அனுமதி அளிக்கப்படாமல் இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை "கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவர்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறன். மிக முக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று  வலியுறுத்தி உள்ளார்.

அண்ணாமலையின் அதிரடி பேச்சு, அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

Similar News