8 மாவட்ட நிர்வாகிகளை அதிரடியாக கலைத்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை! பின்னணி என்ன?

Update: 2022-03-05 13:05 GMT

தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தும் விதமாக திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு உள்ளிட்ட 8 மாவட்டங்களின் நிர்வாகிகள் கூண்டோடு கலைத்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சி மாவட்டங்களில் கீழ்க்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள். கட்சி மாவட்டங்களின் பெயர்கள், திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு.

புதிய மாவட்ட பொறுப்பாளர்:

திருநெல்வேலி கட்டளை ஜோதி, நாகப்பட்டினம் வரதராஜன், சென்னை மேற்கு மனோகரன், வடசென்னை மேற்கு பாலாஜி, கோயம்புத்தூர் நகர் முருகானந்தம், புதுக்கோட்டை செல்வம் அழகப்பன், ஈரோடு வடக்கு செந்தில்குமார், திருவண்ணாமலை வடக்கு ஏழுமலை உள்ளிட்டோர் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளனர். 

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News