'8 மணல் குவாரிகளுக்கு அனுமதி, இதுதான் இயற்கையை பாதுகாக்கும் லட்சணமா?' - தி.மு.க.வுக்கு அண்ணாமலை கேள்வி!

Update: 2022-06-20 13:15 GMT

காவிரி டெல்டா பகுதியில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு தி.மு.க. அரசு அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாலை கூறியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் 8 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூரில் தலா இரண்டு இடங்களிலும், திருச்சியில் ஒரு இடம் என்று மொத்தம் 5 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளது.அதே போன்று சில இடங்களில் மாட்டுவண்டி குவாரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களின் நீரோட்டம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: காவிரி டெல்டா பகுதியில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது அறிவாலயம் அரசு. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலேயே இந்த நிலைமை. இப்படி இயற்கை வளங்களை சூறையாடுவது தான் நீங்கள் கொடுக்கும் பாதுகாப்பா? விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்றுப் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு. இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News