8 லட்ச ரூபாய் மதிப்பீடு வாய்க்கால், போட்ட 3 நாளில் ஒரே மழைக்கு காலி - தொடரும் கமிஷன் வேலை பரிதாபங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட புதிய கான்கிரீட் வடிகால் வாய்க்கால் 3 நாளில் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தரமற்ற முறையில் போடப்பட்டதால் மூன்று நாளில் இடிந்து விழுந்தது புதிய கான்கிரீட் வடிகால் வாய்க்கால்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட புதிய கான்கிரீட் வடிகால் வாய்க்கால் 3 நாளில் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பாக்கம் கிராம சாலையோரத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 8 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்து கான்கிரீட் வடிகால் வாய்க்கால் போடப்பட்டது, குறைந்த அளவில் சிமெண்ட் மற்றும் அதிக அளவில் மணல் கலந்து தரமற்ற முறையில் போடப்பட்டதால் இந்த வாய்க்கால் நேற்று மாலை பெய்த ஒரே மழையில் இடிந்து விழுந்தது.
இப்படி அநியாயமாக மக்களின் வரிப்பணம் வீணாக போகிறதே என அந்த பகுதி மக்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.