"அப்துல் காலம் முஸ்லீம் அல்ல"- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் பேச்சால் சர்ச்சை.! #2017 #Reminder

Update: 2021-03-25 01:15 GMT

இந்தியர்களின் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் 2015ல் காலமானார். அதைத் தொடர்ந்து 2017ல் ஒரு நினைவு மண்டபம் ராமேஸ்வரத்தில் எழுப்பப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட்டது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெயினுலாபுதீன் 2017ல் திரு. அப்துல் கலாம் சிலைகளை வணங்கியதால் நிர்வாணமான துறவிகளுக்கு மரியாதை அளித்ததால் ஒரு முஸ்லிம் அல்ல என்று அவர் கூறியது அந்நேரத்தில் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது.

மாணவர்களுக்கும் ரோல்மாடலாக விளங்கும் திரு அப்துல் கலாம் அவர்களைப் பற்றி மேலும், ஜனாதிபதி ஆக்குவதற்கு முன்பு அவரை யாருக்கும் தெரியாது என்றும் கூட்டத்தில் இருந்த ஒரு சாதாரண விஞ்ஞானிதான் அவர் என்றும், பா,ஜ,கவும், ஆர்எஸ்எஸ் உம் சிலைகளை வணங்குவதில் அவருக்கு ஆட்சேபணை இருப்பதில்லை சங்கராச்சாரியாரிடமிருந்தும் வாழ்த்துக்களை பெறுகிறார் என்பதை கவனித்து அதற்காகவே அவரை ஜனாதிபதி ஆக்கினார் என்று அடுக்கிக் கொண்டே சென்றார். அப்துல் கலாமுக்கு ஒரு முஸ்லிம் பெயர் மட்டும்தான் இருப்பதாகவும் மேலும் கூறினார்.

திரு. அப்துல் கலாமின் நினைவு மண்டபத்திற்கு உள்ளே உள்ள அவரது சிலைக்கு அருகில் ஒரு பகவத்கீதை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து எழுந்த சர்ச்சையில் கலாமின் அண்ணன் பேரன் அதற்கு அருகில் பைபிளும் குரானும் வைத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜெயினுலாபுதீன் அவர்கள் குர்ஆனை அப்துல்கலாமிற்கு பக்கத்தில் வைத்திருந்தால்தான் தாங்கள் மிகவும் ஆட்சேபனை தெரிவித்து இருப்போம் என்றும் சிலைகளை வணங்கும் ஒருவரின் அருகில் குர்ஆன் இருக்கக்கூடாது என்றும் நீங்கள் அப்துல் கலாம் உடைய சிலைக்கு பூணூல் அணிவித்து நெற்றியில் திருநீறு வைத்தால் கூட நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம் என்றும் கூறியதெல்லாம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

முஸ்லீம் அமைப்புகள் அப்துல் கலாமை உண்மையான முஸ்லிம் அல்ல என்று அடிக்கடி கூறி சர்ச்சைகளை கிளப்புவது அப்போதே பலரையும் முகம் சுளிக்க வைத்தது என்பது தான் உண்மை.


Tags:    

Similar News