'சல்லி சல்லியா ஒடைச்சு போச்சே இந்துக்கள் வாக்கு..!' - தருமபுரி எம்.பி மீது கடும் கோபத்தில் அறிவாலயம்
'இந்து மத சடங்குகளை வேண்டாம்' என தி.மு.க எம்.பி செந்தில்குமார் பகிரங்கமாக சொல்லியதன் மூலம் தி.மு.க தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
'இந்து மத சடங்குகளை வேண்டாம்' என தி.மு.க எம்.பி செந்தில்குமார் பகிரங்கமாக சொல்லியதன் மூலம் தி.மு.க தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்க தி.மு.க தலைமை எடுக்கும் கடும் முயற்சிகள் ஒரு புறம் இருக்க மறுபுறம் 'இந்து சமய பூஜை வேண்டாம்' என தி.மு.க எம்.பி செந்தில்குமார் ஒதுக்கியது தி.மு.க தலையை தலைமையை கடுமையாக அதிர வைத்துள்ளது.
மேலும் கடந்த தேர்தலில் இருந்து துவங்கி ஒன்றரை ஆண்டுகளாக இந்துக்களுக்கு எதிரி கிடையாது தி.மு.க என பிம்பத்தை ஏற்படுத்த அறிவாலயம் முயற்சித்து வேலை வரும் வேளையில் அதனை சுக்கு நூறாக உடைத்த எம்.பி செந்தில்குமார் மீது தலைமை கடும் கோபத்தில் உள்ளது.
தி.மு.க துவங்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் தலைவர்கள் இந்து மதத்தை கேலி கிண்டல் செய்வது, கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர் அதே நேரம் சிறுபான்மையினரின் ஓட்டுக்காக சிறுபான்மையினர் மதங்களுக்கு புகழாரம் சுட்டுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இது குறித்து இந்து மதத்தினர் விழிப்புணர்வு அடையாமல் இருந்தனர் இது தி.மு.க'வுக்கு சாதகமாக இருந்தது.
ஆனால் தற்பொழுது இந்து மதத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வால் தி.மு.க'வினர் முகமூடி மக்களுக்கு தெரிய துவங்கி உள்ளது, இதனால் கடந்த சட்டசபை தேர்தலின் சமயத்தில் தி.மு.க'வின் இந்து விரோதப் போக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டது, இதன் காரணமாக இந்து மக்களை சமாதானப்படுத்தும் வகையில் 'தி.மு.க'வில் இருப்பவரில் 90 சதவீதம் இந்துக்கள் என ஸ்டாலின் அவர்களே பிரச்சாரம் செய்யும் வகையில் இருந்தது தி.மு.க'வின் இந்து மத வாக்கு வங்கி மீதான பயம்.