புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்.!

டாக்டர் விஜயபாஸ்கர் உங்கள் வீட்டு பிள்ளை, உங்கள் செல்ல பிள்ளை அவர் ஜெயித்தால் நீங்கள் ஜெயித்த மாதிரி என்று கூறி அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Update: 2021-03-26 07:16 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகையுமான விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது திறந்த வேனில் இருந்து பேசியதாவது: டாக்டர் விஜயபாஸ்கர் உங்கள் வீட்டு பிள்ளை, உங்கள் செல்ல பிள்ளை அவர் ஜெயித்தால் நீங்கள் ஜெயித்த மாதிரி என்று கூறி அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


 



மேலும், புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்தும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அதே போன்று கூட்டணி கட்சியினருக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் திமுகவினரை வெளுத்து வாங்கி வருகிறார்.

Similar News