பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.. சுனில் அரோரா.!

பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.. சுனில் அரோரா.!

Update: 2021-02-11 17:51 GMT

தமிழக சட்டமன்றத்தில் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இதனையொட்டி சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட பணிகளை முடித்துள்ளது. கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையக்குழுவினர் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் சென்னையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடத்தனும் உள்ளிட்டவை இதில் ஆலோசனை செய்யப்பட்டது. அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு கருத்தாக கூறினார்கள். தேர்தல் ஆணையர் அனைத்தையும் பரிலீத்து சாத்தியப்படுத்தவை எவை சாத்தியப்படுத்த முடியாதவை எவை என்பன பற்றி தேர்தல் ஆணையக்குழுவில் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பல்வேறு துறையினரிடம் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர், சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மே 24-ம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிகிறது. ஒவ்வொரு தேர்தல்களிலும் அதிகமான வாக்குகள் பதிவாகும். ஆனால் இந்த தேர்தலில் இன்னும் கூடுதலான வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தேர்தலை அமைதி மற்றும் நேர்மையான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கின்ற வகையில், தேர்தல் பார்வையாளர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
 

Similar News