அண்ணா தொழிற்சங்க தேர்தல். ஓ.பி.எஸ் , ஈ.பி.எஸ் அதிரடி உத்தரவு !
அண்ணா தொழிற்சங்க தேர்தல் வருகின்ற 14ம் தேதி முதல் அடுத்த மாதம் 17ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறும் என்று அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக, வருகின்ற 14.08.2021, 22.08.2021, 29.08.2021, 07.09.2021 மற்றும் 17.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான கால அட்டவணை இத்துடன் வெளியிடப்படுகிறது.
அதே போல், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளில் தேர்தல்களை நடத்துவதற்காக, தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பணிமனைகளில் தேர்தல் ஆணையர்களாகக் கீழ்கண்டவாறு நியமிக்கப்படுகிறார்கள்.
ஆகவே, கழக அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை முறைப்படி நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: Admk
Image Courtesy: Indian express