சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு!
தமிழகத்தில் திமுகு அரசு சொத்து வரியை மும்மடங்கு உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அதன்படி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொத்துவரி தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அப்போது அவர் பேசும்போது: தற்போது திமுக அரசு விதித்த சொத்துவரி மக்கள் மீது மிகப்பெரிய சுமையாக விழுந்துள்ளது. மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த எவ்வித அறிவிப்புகளும் வெளியிடவில்லை. ஆனால் திமுக அரசு உயர்த்திய சொத்து வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து அதிமுக, மற்றும் பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu