நிவாரண உதவிகளை தடுக்கும் வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மீது அ.தி.மு.க. புகார்.!

திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு மாவட்டங்களில் அராஜகப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த கொரோனா காலங்களில் அதிமுகவினர் வழங்கும் நிவாரணப் பொருட்களை தடுத்து வருகின்றனர்.

Update: 2021-06-09 12:52 GMT

வேலூர் திமுக எம்.எல்.ஏ., கார்த்திகேயன் அராஜகப் போக்குடன் செயல்படுகிறார் எனவும், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதையும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தடுத்து மிரட்டுவதாக வேலூர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு மாவட்டங்களில் அராஜகப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த கொரோனா காலங்களில் அதிமுகவினர் வழங்கும் நிவாரணப் பொருட்களை தடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வேலூர் மாநகரில் அதிமுகவினர் வழங்கும் நிவாரணப் பொருட்களை தடுத்து வருவதாக, மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், வேளாண் விற்பனைக் குழுத் தலைவருமான எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையிலான அதிமுகவினர் கொரோனா ஊரடங்கின்போது நிவாரணப் பொருட்களை வழங்கி வந்துள்ளனர். அதே போன்று மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேருக்குத் தலா பத்து கிலோ அசிரி மூட்டையை நிவாரணப் பொருளாக கொடுத்து வருகிறார்கள்.

இதனிடையே நிவாரணப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் வேலூர் திமுக எம்.எல்.ஏ., கார்த்திகேயன் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். அதிமுகவினர் வழங்கும் பொருட்களை யாரும் வாங்கக்கூடாது என தூய்மை பணியாளர்களை மிரட்டி வருவதாக எம்.எல்.ஏ., மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News