திருவண்ணாமலையில் அ.தி.மு.க. கொடி கம்பத்தின் நிறத்தை மாற்றிக்கொண்ட தி.மு.க.!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் கிராமத்தில் அதிமுக கொடி கம்பத்தின் நிறத்தை திமுக நிறத்தில் மாற்றிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-04 06:33 GMT

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் கிராமத்தில் அதிமுக கொடி கம்பத்தின் நிறத்தை திமுக நிறத்தில் மாற்றிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் கடந்த 2005-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டு அதன் அருகாமையில் அதிமுக கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளது.


 



இந்நிலையில், எம்ஜிஆர் சிலையின் பீடம் மற்றும் கொடி கம்பத்தின் நிறத்தை திமுகவினர் தங்களது சின்னம் போன்று மாற்றிக்கொண்டனர். இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடந்துள்ளது. மேலும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அதிமுகவினர் ஒன்று திரண்டு எம்.ஜி.ஆர். சிலை முன்பாக கூடினர்.

இதன் பின்னர் உடனடியாக கருணாநிதி படம் அகற்றப்பட வேண்டும், கொடி கம்பத்தில் உள்ள திமுகவின் நிறத்தை மாற்ற வேண்டும். திமுகவினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News