முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தி.மு.க.வின் அரசியல் காழ்ப்புணர்ச்சி!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை திமுக அரசு கைது செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-21 16:31 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை திமுக அரசு கைது செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 19ம் தேதி மாநகராட்சி தேர்தலின்போது திமுகவினர் கள்ள ஓட்டு போட்டனர். அவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக பொய்யான வழக்கை பதிவு செய்து அத்துமீறி அவரது வீட்டில் நுழைந்து கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு அதிமுக தலைமை கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக அரசு தன்னுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கள்ள ஓட்டு போட்டவர்களை விட்டுவிட்டு அதை தடுக்க முயற்சித்தவரை கைது செய்திருப்பது நகைப்புக்குரியது! இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: The Hindu

Tags:    

Similar News