தி.மு.க. குடும்ப பத்திரிகைக்கு மட்டும் வெண்ணெய்.. மற்ற பத்திரிகைக்கு சுண்ணாம்பு.. ஜெயகுமார் அதிரடி ட்விட்.!
திமுக அரசு அமைந்த பின்னர் தமிழகத்தில் பல்வேறு வகையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் திமுகவின் குடும்ப பத்திரிக்கையான முரசொலி, தினகரன், குங்குமம் மட்டும் நூலகங்கள் வாங்க வேண்டும் என்று அரசுத்துறை உத்தரவிட்டுள்ளது பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்கத்தின் சார்பில் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. அப்போது அண்ணா கிராமம் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கிவரும் நூலகங்களுக்கு தினமும் 3 நாளிதழ்கள் தவறாமல் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தினகரன், குங்குமம், முரசொலி வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் பல அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனாவினால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அனைத்து பத்திரிகைகளின்விற்பனையும் முடங்கியுள்ளது.
இந்நிலையில் முரசொலி, தினகரன், குங்குமம் மட்டும் நூலகங்கள் வாங்க அரசுத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பத்திரிகைகளையும் வாங்க உத்தரவிட வேண்டியதுதானே? ஏன் ஒருகண்ணில் வெண்ணெய்! ஒருகண்ணில் சுண்ணாம்பு! " என்று ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.