தி.மு.கவின் 520 தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆச்சு? அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது தமிழக பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி அரங்கேறி இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படம் பொறிக்கப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான அட்டை வழங்கும் பணி போன்ற பல்வேறு பணிகளுக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இது நிகழ்ச்சியில் பல்வேறு தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு உதவிகளை வழங்கினார். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியின் போது இது பற்றி கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலின் போது 520 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இதை அ.தி.மு.க தவிர வேறு கட்சிகள் தட்டி கேட்பதில்லை.
எனவே தி.மு.க தலைக்கனம், மமதையுடன் இருந்து வருகிறது. இந்த அரசை எதிர்த்து அனைவரும் கேள்வி கேட்க வேண்டும். குறிப்பாக அ.தி.மு.கவிற்கும் ஒத்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டி இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar