சசிகலா காரில் இருந்து அ.தி.மு.க. கொடி அகற்றப்படும்.. ஓசூரில் டி.எஸ்.பி. எச்சரிக்கை.!

சசிகலா காரில் இருந்து அ.தி.மு.க. கொடி அகற்றப்படும்.. ஓசூரில் டி.எஸ்.பி. எச்சரிக்கை.!

Update: 2021-02-08 09:34 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலை ஆன சசிகலா பெங்களூரில் இருந்து இன்று தமிழகம் திரும்புகிறார்.

இதனையொட்டி பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் இருந்து காரில் சென்னையை நோக்கி புறப்பட்டு கொண்டிருக்கிறார். அப்படி அவர் செல்லும் காரில் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. கொடி கட்டிய சம்பவத்திற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா தமிழக எல்லையான ஓசூர் அடுத்துள்ள ஜூஜூவாடிக்கு வரும் பட்சத்தில் அவருக்கு போலீசார் நோட்டீஸ் அளிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அந்த நோட்டீஸில் காரில் இருந்து கொடியை அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக சிறிது நேரமும் அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக கொடி கட்டப்பட்ட காருடன் சசிகலா தமிழக எல்லையான ஓசூரில் நுழைந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஓசூரில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அமமுக தொண்டர்கள் என்ன செய்வார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சசிகலாவுடன் டிடிவி தினகரன், மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உடன் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News