அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

Update: 2022-07-11 02:31 GMT

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக சென்னை பசுமை வழி சாலையில் இருந்து பொதுக்குழு நடைபெறும் வானகரத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.

இன்று சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் நிலையில், காலை 5 மணி முதலே பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். 


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியை வழி நடத்தி வந்தனர். ஆனால் தற்போது இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமை இருந்தால் மட்டுமே கட்சியை வழிநடத்தி செல்ல எளிதாக இருக்கும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் முடிவு செய்தனர். அதனை பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முன்வைத்தனர். அதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியை நோக்கி தற்போது அ.தி.மு.க. நகர்ந்து வருகிறது.

ஒற்றைத் தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இரட்டை தலைமையே இருக்கட்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்று வழக்கும் தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வரஉள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். இதனால் சென்னை மாநகர சாலையில் அ.தி.மு.க.வினரே அதிகம் பேர் பயணம் செய்வதையும் பார்க்க முடிகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News