அ.தி.மு.க ஆட்சியில் கட்டிய பாலங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் !
அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்களை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் முக்கிய பகுதியான கோயம்பேடு, வேளச்சரியில் அதிக வாகன நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்டு இரண்டு புதிய பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 93.5 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
இந்நிலையில் சமீபத்தில் அந்த பாலம் கட்டு பணி முடிவடைந்ததால் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க முடிவுசெய்யப்பட்டது. இதனைதொடர்ந்து வருகிற நவம்பர் 1'ம் தேதி இரண்டு இடங்களிலும் உள்ள மேம்பாலங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.