அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனின் மருத்துவ செலவை ஏற்றுக்கொண்ட கட்சி தலைமை !

அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அவைத் தலைவரும், கழகத்தின் மூத்த முன்னோடியுமான மரியாதைக்குரிய திரு.இ.மதுசூதனன் அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 5.8.2021 அன்று மரணமடைந்துவிட்டார்.;

Update: 2021-08-11 14:36 GMT
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனின்  மருத்துவ செலவை ஏற்றுக்கொண்ட கட்சி தலைமை !

அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அவைத் தலைவரும், கழகத்தின் மூத்த முன்னோடியுமான மரியாதைக்குரிய திரு.இ.மதுசூதனன் அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 5.8.2021 அன்று மரணமடைந்துவிட்டார். 


இந்நிலையில், திரு.இ.மதுசூதனன் அவர்களுடைய மருத்துவ சிகிச்சைக்கான, மொத்த செலவுத் தொகை 26,74,063/ ரூபாயை, அதிமுக அப்பல்லோ மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Admk

Image Courtesy:Admk Twiter

Tags:    

Similar News