அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் !

சிறுவயதில் எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றத்தை ஆரம்பித்து பின்னாளில் சென்னை அதிமுகவின் மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தார். இதன் பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். பின்னர் கடந்த 2007ம் ஆண்டு முதல் அவைத்தலைவர் பதவியில் இருந்து வருகிறார்.

Update: 2021-08-05 12:10 GMT

அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் 80, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். இதனையடுத்து மீண்டும் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று மாலை பிரிந்தது.  

அவர் கட்சியில் சிறுவயதில் எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றத்தை ஆரம்பித்து பின்னாளில் சென்னை அதிமுகவின் மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தார். இதன் பின்னர் ஜெயலலிதா அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். பின்னர் கடந்த 2007ம் ஆண்டு முதல் அவைத்தலைவர் பதவியில் இருந்து வருகிறார்.

அதிமுக பிளவுப்பட்ட போது அவைத்தலைவர் மதுசூதனன் முக்கிய பங்காற்றி கட்சியை ஒன்று சேர்த்தவர் ஆவார். அவரது மறைவால் அதிமுக கொடிக்கம்பம் மூன்று நாட்களுக்கு அரை கம்பத்தில் பறக்கும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:The hindu

https://www.puthiyathalaimurai.com/newsview/112007/ADMK-Speaker-Madhusudhanan-passed-away

Tags:    

Similar News