தி.மு.க. அடக்குமுறையை கண்டித்து எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு அ.தி.மு.க. போராட்டம் !

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு கோவை, குனியமுத்தூரில் உள்ளது. இந்த வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-08-10 06:15 GMT
தி.மு.க. அடக்குமுறையை கண்டித்து எஸ்.பி.வேலுமணி வீடு முன்பு அ.தி.மு.க. போராட்டம் !

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு கோவை, குனியமுத்தூரில் உள்ளது. இந்த வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இத்தகவல் உடனடியாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்ட 8 பேரும் மற்றும் நிர்வாகிகள் பெண் தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் வீட்டின் முன்பாக திரண்டனர்.

அப்போது போலீசார் அவர்கள் அனைவரையும் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அடக்குமுறைக்கு அதிமுக ஒரு போதும் அஞ்சாது என்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.

Source: Maalaimalar

Image Courtesy: Admk Facebook

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/10094158/2909954/Tamil-news-ADMK-members-protest-in-coimbatore.vpf

Tags:    

Similar News