மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பில்லையா?? கோவை ஆட்சியரின் செயல் சரிதானா!!
கோவையில் மனு அளிக்க வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம், மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்று மனு வாங்காமல் உட்கார்ந்துகொண்டே மனுவை பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பில்லையா என மனு அளிக்க வந்த எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பியபோதுதான், ஆட்சியர் எழுந்து நின்று மனுவை வாங்கியுள்ளார்.

கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனு அளிப்பதற்காக சென்றனர். கோவையில் தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வேண்டும், அரசு விழாக்களில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும்,என்பன போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனுவை அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அமர்ந்த நிலையில் மனுவை பெற்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் இப்படிதான் மனுவை வாங்குவீர்களா என கேள்வி எழுப்பினர்.
இதனை தொடர்ந்து ஆட்சியர் சமீரன் எழுந்து நின்று கோரிக்கை மனுக்களை பெற்றார். மக்கள் பிரதிநிதிகளை ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகள் அவமரியாதை செய்வது வாக்களித்த மக்களை அவமானப்படுத்தும் செயல் என அதிமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மனுவை அளித்த பின்னர் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகளை புறக்கணிக்கும் சூழலை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பணிகளை ரத்து செய்யக்கூடாது என ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.
News Source: Admk Twiter
Image Courtesy: Twiter