முதலமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த திமுக மாநில நிர்வாகி.!

திமுகவில் மாநில விவசாய அணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இவர் அரவக்குறிச்சி மட்டமன்ற தொகுதியில் சீட் கேட்டு மறுக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-03-24 08:56 GMT
முதலமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த திமுக மாநில நிர்வாகி.!

கடந்த 1980ம் ஆண்டு முதல் இரண்டு முறை அதிமுகவில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற சின்னசாமி, அமைச்சராகவும் இருந்துள்ளார். கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2011ம் ஆண்டு திமுகவில் இணைந்துக் கொண்டார்.

இவருக்கு திமுகவில் மாநில விவசாய அணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இவர் அரவக்குறிச்சி மட்டமன்ற தொகுதியில் சீட் கேட்டு மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர், கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Similar News