ஸ்டாலின் அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சு? தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. போராட்டம்.!

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றுகூட தற்போது வரை நிறைவேற்றவில்லை எனக் கூறி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

Update: 2021-07-28 06:45 GMT

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றுகூட தற்போது வரை நிறைவேற்றவில்லை எனக் கூறி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

கடந்த சட்ட மன்ற தேர்தலின்போது திமுக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து மக்களிடம் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை. 


அதில் முக்கியமானவை பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 5 மற்றும் 4 ரூபாய் குறைப்பு, ரேஷன் அட்டைக்கு மாதம் ரூ.1000, முதியோர் உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்குவது என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அதில் ஒன்றுகூட தற்போது வரை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், போலியான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடியில் தனது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


அதே போன்று சேலம் சூரமங்கலத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார். மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, தருமபுரி, கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரம் மற்றும் பஞ்சாயத்து, பேரூராட்சி என பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News