விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் அனைத்தும் நாசமாகியது. இது விவசாயிகளை மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்தியது.மழைக்காலம் முடிந்து மாதக்கணக்கில் ஆகியும் இன்னும் திமுக அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தொகையை வழங்கவில்லை. இதனை கண்டிக்கின்ற விதமாக டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
அதாவது தஞ்சை, திருவாரூர், நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக திமுக அரசு இழப்பீட்டுத்தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அலுவலகம் முன்பாக அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போன்று நாகை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Source: Maalaimalar
Image Courtesy: Facebook