மக்கள் விரோத ஆட்சியை தி.மு.க. நடத்துகிறது: ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு!

Update: 2022-04-05 09:43 GMT
மக்கள் விரோத ஆட்சியை தி.மு.க. நடத்துகிறது: ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது என்று சொத்துவரி உயர்வு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றியதாவது: 25 சதவீதத்திலிருந்து 150 சதவீதம் வரை சொத்து வரியை திமுக உயர்த்தியுள்ளது.

ஏழை, எளியோர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்கின்ற வகையில் இன்றைக்கு சொத்துவரியை திமுக அரசு உயர்த்தியுள்ளது. இதனை உடனடியாக திரும்பபெற வேண்டும். மக்கள் ஏற்கனவே கண்ணீரில் உள்ள நிலையில் மீண்டும் திமுக அரசு சொத்து வரியை உயர்த்தியிருப்பது கண்ணீரில் மிதக்கும் செயலாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News