தி.மு.க. ஆட்சியில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவிட்டது: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., வி.சி.க., வெளிநடப்பு!

தமிழக சட்டசபை இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. ஆண்டின் முதல் நாள் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி வைத்தார். முதலில் வணக்கம் என்று தமிழில் உரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2022-01-05 07:20 GMT

தமிழக சட்டசபை இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. ஆண்டின் முதல் நாள் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி வைத்தார். முதலில் வணக்கம் என்று தமிழில் உரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது துவக்கப்பட்ட அம்மா கிளினிக் மூடப்பட்டது மற்றும் அம்மா பல்கலைக்கழகம் பெயரை மாற்றியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். மேலும், வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது என்றார்.

மேலும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விளக்கு அளிக்கின்ற மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்று விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள விசிக வெளிநடப்பு செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: Daily Thanthi

Image Courtesy:Dinamani

Tags:    

Similar News