ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் ஒரு கட்சிக்கு காய்ச்சல் அடிக்கிறது ! - பிரதமர் மோடி கடும் தாக்கு!

தன்னுடைய 71வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 2.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வுக்கு பின்னர் பிரதமர் மோடி இன்று கோவாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுடன் உரையாற்றினார்.

Update: 2021-09-18 10:45 GMT

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதால் எதிர்தரப்பில் முக்காடு போட்டு, நள்ளிரவுக்கு பின்னர் ஒரு அரசியல் கட்சி காய்ச்சலை அனுபவிக்கத் தொடங்கியுள்ளதாக அறிந்தேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தன்னுடைய 71வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 2.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வுக்கு பின்னர் பிரதமர் மோடி இன்று கோவாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுடன் உரையாற்றினார்.

அப்போது வீடியோ கான்பரன்சிங் மூலமாக இணைந்த பிரதமர் மோடி, காய்ச்சல், சோர்வு போன்ற தடுப்பூசிகளின் பல பக்க விளைவுகளை பற்றி நான் கேள்வி பட்டுள்ளேன். நான் விஞ்ஞானி அல்ல, மருத்துவரும் அல்ல.

ஆனால் நேற்று ஒரே நாளில் நாட்டில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பிட்ட பின்னர் ஒரு அரசியல் கட்சிக்கு நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் தங்களுக்கு காய்ச்சல் வந்தாக புகார் அளித்துள்ளது. அது சாத்தியமா? என பிரதமர் மோடி ஒரு மருத்துவரிடம் கேட்டார்.

மேலும் அவர் கூறும்போது, கோவா நம் நாட்டின் பன்முகத்தன்மையை அழகாக படம் பிடிக்கின்ற மாநிலம். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸில் 100 சதவீத நிர்வகித்த கோவாவின் சாதனை நமக்கு பெருமை அளிப்பதாக கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathamurai


Tags:    

Similar News