சிவாஜிக்கு பின்.. திரைத்துறையின் பொக்கிஷம் நடிகர் ரஜினி.. அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

சிவாஜிக்கு பின்.. திரைத்துறையின் பொக்கிஷம் நடிகர் ரஜினி.. அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

Update: 2020-12-31 08:08 GMT

அதிமுகவில் பிளவு என்பது எந்தக் காலத்திலும் நடைபெறப் போவதில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க., மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளது.

2021ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம், மக்கள் மனநிலையும் அந்த நிலையில் தான் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
விவசாயிகள் மீது முதலமைச்சர் நன்மதிப்பு வைத்துள்ளார் என்பதால் காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தார்.

குடிமராமத்து திட்ட பணியால் இன்று அனைத்து பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. நீர் மேலாண்மையை பாதுகாப்பதில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசும் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருப்பதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது. கொரோனா தொற்று காலத்தில் தனது உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் வெளியே வரவில்லை. தனது உடல் நிலையை கருத்தில் கொண்டுதான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

நாங்களும் அதை தான் நினைக்கிறோம் அவர் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பின்னர் திரைத்துறையின் பொக்கிஷமாக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார்.

இந்திய அளவில் கலைத்துறையில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். நடிகர் ரஜினிகாந்தின் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை முக்கியம். நடிகர் ரஜினிகாந்த் நினைப்பதுபோல தான் எங்களுடைய எண்ணமும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar News