பேரறிவாளன் விடுதலை: தி.மு.க.வை பொறுத்தமட்டில் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் - அண்ணாமலை!

Update: 2022-05-19 08:18 GMT

பேரறிவாளன் விடுதலை சம்பவத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க. ஏற்றுக்கொள்கிறது என்று கூறியிருந்தார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. மேலும், பேரறிவாளன் விடுதலையில் தி.மு.க.வை பொறுத்தவரையில் காக்கை உட்கார பனம்பழம் விருந்தது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறை தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142ஐ பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை தமிழக பா.ஜ.க. ஏற்பதாகவும், இது குறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

காக்கை உட்கார விழுந்த பனம்பழம் பேரறிவாளன் விடுதலை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், அதை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் நீதிமன்றங்கள் மீதும் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், இந்திய ஜனநாயகத்திற்கும், நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள்தான் மிகப்பெரிய நம்பிக்கையும் உறுதிப்பாட்டையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. மாநில அரசின் உரிமைகளிலோ ஆளுநரின் அதிகாரங்களிலோ, தமிழக அரசைத் தவிர, நீதிமன்றங்களுக்கும் அல்லது மத்திய அரசுக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. 


நீதியரசர் நாகேஸ்வரராவ் அவர்கள் முன்னர் விசாரணையின் போது கேட்ட விளக்கங்களை எல்லாம் நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்த கண்டனங்கள் போல முதல்வர் தன் அறிக்கையில் பசப்பியுள்ள கருத்துக்களில் துளியும் உண்மையில்லை. நீதிமன்றத் தீர்ப்பில் மத்திய அரசுக்கோ, ஆளுநருக்கோ எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. மரணங்களில் அரசியல் செய்யும் மாநிலக் கட்சிகள் இதையும் அரசியலாக்க முயற்சிப்பதில் வியப்பில்லை. ஆனால் அதில் துளிகூட உண்மையில்லை என்பது மக்களுக்குத் தெரியும். அப்படி மத்திய, மாநில உரிமைகளைப் பற்றிய பெரிய புரிதல் இருப்பவர்கள் மத்திய அரசில் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் தி.மு.க.வின் ஆட்சிதானே இருந்தது. 2006 முதல் 2011 வரை கலைஞர் தானே முதலமைச்சர்?. அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கருணாநிதி அவர்கள் பேரறிவாளன் ஏன் விடுதலை செய்யவில்லை. கருணாநிதிக்கு பேரறிவாளன் விடுதலையில் உடன்பாடு இல்லையா? அல்லது கலைஞரைவிடத் தான் அரசியல் வித்தகம் மிக்கவர் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா? இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News