வேளாண் சட்டங்கள்.. மாவட்டந்தோறும் விவசாயிகளை சந்திக்கும் பா.ஜ. நிர்வாகிகள்.!

வேளாண் சட்டங்கள்.. மாவட்டந்தோறும் விவசாயிகளை சந்திக்கும் பா.ஜ. நிர்வாகிகள்.!

Update: 2020-12-05 07:30 GMT

பா.ஜ.க., நிர்வாகிகள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று, விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்த சட்டத்தில் உள்ள பயன்களை விரிவாக எடுத்துரைக்க உள்ளோம். இந்த மக்கள் இயக்கத்தை, வருகின்ற 8ம் தேதி துவக்க இருக்கிறோம் என்று தமிழக பா.ஜ.க., தலைவர் முருகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்: பா.ஜ.க., சார்பில் நவம்பர் 6ம் தேதி வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் துவக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள், யாத்திரையை தடை செய்ய கோரினர். யாத்திரைக்கு சென்றால் தமிழகத்தில் மிகப்பெரிய கலவர் ஏற்படும் என்றனர். ஆனால், யாத்திரை திட்டமிட்டபடி நடந்தது. மக்களின் எழுச்சியும் இருந்தது.

டெல்டா மாவட்டங்களில் தற்போது புயல் காரணமாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க, தொண்டர்கள் புயல் நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.


வருகின்ற 7ம் தேதி, திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்க இருக்கிறார். விவசாய சீர்திருத்த சட்டங்களால் விவசாயிகள் அடையப் போகும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக்க, வருகின்ற 8ம் தேதி முதல் மக்கள் இயக்கத்தை நடத்த இருக்கிறோம். விவசாய சீர்திருத்த சட்டம் மாநில நிர்வாகிகள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, விவசாயிகளை சந்தித்து, விவசாய சீர்திருத்த சட்டம் குறித்து எடுத்துரைக்கின்றனர்.


மத்திய அரசு விவசாயிகளுக்காக, பயிர் காப்பீடு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 41 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நண்பனாக மத்திய அரசு திகழ்ந்து வருகிறது.

விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்பி வருகின்றனர். வட மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை வைத்து தமிழகத்திலும் விவசாயிகளை திசை திருப்ப, தி.மு.க., கூட்டணி கட்சிகள் முயற்சித்து வருகிறது. இதனை தமிழக விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

Similar News