ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் சமாஜ்வாடி கட்சி தலைவருக்கு தொடர்பு!

Update: 2022-02-19 11:18 GMT
ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் சமாஜ்வாடி கட்சி தலைவருக்கு தொடர்பு!

உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது 3வது கட்ட வாக்கு பதிவு நாளை (பிப்ரவரி 20) தொடங்குகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசியதாவது: பயங்கரவாதம் என்று வருகின்றபோது பாஜகவின் நோக்கம் மற்றும் எண்ணங்கள் எப்போதுமே பூஜ்ய சகிப்புதன்மையுடனேயே இருக்கிறது.

ஆனால் சமாஜ்வாடி கட்சி பயங்கரவாதத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்கின்ற நிலைப்பாட்டை எடுக்கும். ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை பற்றி பேச வேண்டுமானால் அதில் சமாஜ்வாடி தலைவர்களுக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News