அ.தி.மு.க.வில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.?
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகிறது. அதே போன்று பிரதான கட்சியான அதிமுகவும் தனது கட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

தற்போது அதிமுக கூட்டணியில், பாமகவுக்கு 23 இடங்களும், பாஜகவுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த கட்சிகளுடன் கூட்டணி முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 5ம் தேதி அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (ராயபுரம், சென்னை), சி.வி.சண்முகம் (விழுப்புரம்), எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை- தனி) ஆகிய 6 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. இன்று வெளியிட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் இன்று இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.