சட்டமன்ற தேர்தல்: அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு.!
தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா உட்பட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா உட்பட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகுகிறது. நேற்றைய தினம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என, தமிழ்நாடு பிராமணர்கள் சங்க மாநில நிர்வாகக்குழுவில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பேசும்போது, சென்னையில் 16 தொகுதி உட்பட தமிழகத்தில் 36 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பிராமணர்கள் உள்ளனர் என கூறினர்.