சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம்: தேவேந்திர குல வேளாளர்.!

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம்: தேவேந்திர குல வேளாளர்.!

Update: 2021-02-16 14:20 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மாநில தலைவர் தங்கராஜ் கூறியுள்ளார்.

இது பற்றி பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பட்டியலினத்தவர் பட்டியலில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட் பிரிவுகளையும் ஒன்றிணைந்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என நீண்டகால கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்றது. இதற்கான மசோதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே சென்னை வந்திருந்த பிரதமர் மோடி பேசுகையில், தேவேந்திர குல வேளாளர் என அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு தேவேந்திர குல வேளாளர் சமூகம் நன்றியை தெரிவித்து வருகின்றது.

மேலும், வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறினார். எங்களது சமூதாய மக்கள் 60 லட்சம் பேர் உள்ளனர். கிட்டத்தட்ட 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றி வாய்ப்பை நாங்கள் நிரண்யம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar News