இன்று வெளியாகும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை.. பல்வேறு அறிவிப்பு வெளியாவதால் உற்சாகத்தில் தொண்டர்கள்.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக 178 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் 55 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கவில்லை.

Update: 2021-03-14 04:21 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக 178 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் 55 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், மகளிர் தினம் அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிமா 2 முக்கிய தேர்தல் வாக்குறுதியை அளித்தார். அதில் முதலாவது ஒவ்வொரு வீட்டிற்கும் வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். 2வது ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


 



இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற பெண்கள் மட்டுமின்றி நகர்புறங்களில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்ற பல அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னைக்கு சென்றுவிட்டனர்.


 



இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எந்த மாதிரியான திட்டங்கள் இடம்பெறும். பொதுமக்களுக்கு சாதகமாக வருமா என்பன பற்றிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

Similar News