அ.தி.மு.க., பொதுக்குழு.. செயற்குழு.. தேதி வெளியிட்ட கட்சி தலைமை.!

அ.தி.மு.க., பொதுக்குழு.. செயற்குழு.. தேதி வெளியிட்ட கட்சி தலைமை.!

Update: 2020-12-21 18:26 GMT

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் செயற்குழு பொதுக் குழுவைக் கூட்டி தேர்தலை சந்திப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறது.

தி.மு.க., கட்சி சார்பில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்த கட்டமாக அ.தி.மு.க.வும் தனது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடும் தேதியை அறிவித்துள்ளது.

அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அ.தி.மு.க.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு ஜனவரி 9ம் தேதி கூடும் என்றும் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பொதுக்குழு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழுவில் தேர்தலை எவ்வாறு சந்திப்பது, கூட்டணி அம்சங்கள், தேர்தல் வியூகம் உட்பட ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக செயற்குழு கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Similar News