அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

Update: 2021-02-08 14:21 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா தமிழகத்திற்கு திரும்பி வந்துக்கொண்டிருக்கிறார். அப்படி வரும் சசிகலா அதிமுகவின் கொடியை தனது காரில் கட்டிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தார். அதிமுக நிர்வாகிகள் சசிகலா மீது ஏற்கெனவே டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

அந்த புகாரில் சசிகலா எந்த விதத்திலும் எங்களின் கட்சியின் கொடியை பயன்படுத்த கூடாது. அவர் அப்படி பயன்படுத்தினால் அவர் மீது காவல்துறை நடவடிக்கையை எடுக்கலாம் என கூறியிருந்தனர். அதே போன்று சசிகலா தமிழக எல்லையான ஓசூருக்கு நுழையும்போது அவரது காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது. இதனையடுத்து அவர் மற்றொரு காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்டு கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சசிகலா கொடி பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கும் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தேர்தல் ஆணையமே உறுதிப்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி சசிகலா அதிமுகவை உரிமைகோர முடியாது. மேலும், சசிகலாவும் திமுக தலைவர் ஸ்டாலினும் சேர்ந்து இந்த ஆட்சியை கலைக்க திட்டம் போட்டவர்கள். எனவே சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் கொடியை பயன்படுத்த எந்தவித உரிமையும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
 

Similar News