சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி.. டிஜிபியிடம் புகார் அளித்த அமைச்சர்கள்.!

சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி.. டிஜிபியிடம் புகார் அளித்த அமைச்சர்கள்.!

Update: 2021-02-04 18:25 GMT

மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும்போது சசிகலா தனது காரில் அதிமுக கட்சியின் கொடியை பயன்படுத்திய விவகாரத்தில் அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகள் பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார். விடுதலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சென்றார். இந்த சம்பவத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிராக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளான நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மீண்டும் தமிழகத்திற்கு சசிகலா வருகினற 8ம் தேதி தமிழகத்திற்கு வருகின்றார் என்ற தகவல்கள் வெளியாகியது. இதனிடையே மீண்டும் அவர் தமிழகம் வரும்போது தனது காரில் அதிமுக கொடியை கட்டினால் நடவடிக்கையை காவல்துறையினர் எடுப்பார்கள் என்று தெரிகிறது. அதிமுக அமைச்சர்கள் ஒன்றாக சேர்ந்து டிஜிபியிடம் புகார் அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News